உங்களை நீங்களே கொலை செய்து கொள்ளாதீர்கள். அல்குர்ஆன் 4:29
புகை பிடிப்பது தற்கொலைக்கு சமமாகும்
சவுதி அரேபியா இஸ்லாமிய அழைப்பு வழிகாட்டி மையத்தின் அனைத்து ஆலிம் ( முத்தவ்வாக் )களும் ஒருமித்து ஒரு வரவேற்கத் தக்கக் கருத்தை வெளியிட்டுள்ளார்கள் அத்துடன் அக்கருத்துக்களை பிரசுரங்களாக்கி வண்ணத்திலும் வெள்ளையிலுமாக லட்சக் கணக்கானப் பிரதிகளை சவுதி அரேபியா முழுவதும் விநியோகித்துள்ளார்கள்.
அவர்கள் வெளியிட்டிருக்கும் கருத்து யாதெனில் சிகரெட்டில் உள்ள நிக்கோட்டின் எனும் நச்சுப்பொருள் இதயத்தையும், நுரையீரலையும் பாதிக்கச்செய்கிறது இதனால் அவ்வுறுப்புக்கள் சுகவீனமடைந்து விடுகிறது. இவைகளால் பல கட்டங்களில் இதயத்துடிப்பு நின்று ( ஹார்ட் அட்டாக் ) ஏற்பட்டு உயிர் போய் விடும் நிலை ஏற்படுகிறது. மேற்படி உறுப்புக்கள் செயல் இழக்க நாமே காரணமாகி விடுவதால் இதுவும் தற்கொலைக்கு சமமானதே என கருத்துத் தெரிவித்து இருக்கிறார்கள்.
மேற்கானும் தற்கொலையைத் தடுக்கும் திருமறை வசனத்தை, புகைத்து தன்னை அழித்துக் கொள்ளும் புகை(தற்கொலை)யாளர்களுக்கு உதாரணமாகக் காட்டியிருப்பது வரவேற்புடையதாகும்.
இன்று புகைப் பிடிப்பது, புகையிலை உபயோகிப்பது பொடிப் போடுவது (நாசிக்குள் செலுத்தும் ஒரு வகை தூள் இதுவும் புகையிலையிலிருந்து தயாரிக்கப் படுவதாகும்) அவைகளை உபயோகிப்போரில் அதிகமானோர் நம்மவர்களும் உண்டு என்பதில் நம்மில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அவைகளில் சிகரெட் எனும் உயிர் கொல்லியை புகைப்பவர்களே அதிகமானோர்.
அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் தயாரிக்கப்படும் இந்த உயிர் கொல்லி சிகரெட்கள் பெரும்பாலும் நமது இஸ்லாமிய நாடுகளில் குறிப்பாக வளைகுடா நாடுகளில் அதிகமாக விற்பனையாவதை பல புள்ளி விபரங்கள் ஊடகங்கள் வாயிலாக அவ்வப்போது நமக்கு அறிவித்துக் கொண்டிருக்கின்றன.
மேல்படி சிகரெட் கம்பெனிகள் தங்களுடைய வருமானத்தில் சில சதவிகிதத்தை இஸ்ரேலில் இயங்கும் சியோனிச அமைப்புகளுக்கு முஸ்லிம்களை கொன்றொழிக்கும் சேவை ? க்கு கொடுத்து தங்களது பங்களிப்பை செலுத்தி வருகின்றன..
மேற்படி நாட்டு சிகரெட்களை வளைகுடா பிராந்தியங்களில் விற்றுக் காசாக்கிக் கொடுத்து மேலும் நம் சகோதர முஸ்லிம்களை கொலைக்கு மேல் கொலை செய்வதற்கு அவர்களுடைய பொருளாதாரத்தை பலப்படுத்திக் கொடுப்பதுடன் இதை புகைக்கும், விற்கும் நாம் நம்முடைய உயிரை தற்கொலை செய்து கொள்கிற அவல நிலையையும் அடைகிறோம்.
மேல்படி விஷயங்களை சமுதாய நலனில் அக்கறை கொண்ட பல இஸ்லாமிய ஊடகங்கள் - இஸ்லாமிய அமைப்புகள் புள்ளி விபரங்களுடன் அவ்வப்பொழுது அறிவித்துக் கொண்டே வந்தாலும் தன்னையும் அழித்து தம் சகோதர இனத்தையும் குறி வைத்துத் தாக்கும் செயலுக்கும் அமைப்புகளுக்கும் விபரம் தெரியாமல் உதவிக் கொண்டிருக்கும் நம் சமுதாய சிகரெட் விற்பனை தாரர்களுக்கும் புகைப்பாளர்களுக்கும் அல்லாஹ் நேர்வழியை வழங்க பிரார்த்திப்போம். இப்புகைப் பழக்கம் உள்ளப் பெரும்பாலோர் மிக எளிதாகக் கூறும் பதில் என்னத் தெரியுமா ? புகைப் பழக்கத்தை மார்க்கம் தடை செய்துள்ளதா ? ஆதாரத்தைக் கொடுங்கள் என்பதாகும்.
கயிறை கழுத்தில் மாட்டிக் கொண்டு தொங்கி விடுவதும், சாலைகளில் சென்று வாகணங்களுக்கு குறுக்கே விழுந்து தன்னை சிதைத்துக் கொள்வதும், தீ இட்டுக் கொளுத்திக் தன்னை அழித்துக் கொள்வதும், விஷம் குடித்து மாய்த்துக் கொள்வதும் மட்டும் தற்கொலை அல்ல. மாறாக உடல் உறுப்புகளை செயலிழக்கச் செய்யும் பழக்கம் ஒவ்வொன்றும் தற்கொலைக்கு சமமானது தான்
உதாரணத்திற்கு
உடல் முழுவதும் சிறப்பாக இயங்குவதற்கு உடல் உறுப்புக்களில் மற்ற உறுப்புக்ககைக் காட்டிலும் நுரையீரல் முக்கிய பங்கு வகிக்கிறது நுரையீரல் செயல் இழந்து விட்டால் முழு உடலும் ஸ்தம்பித்துப் போய் உயிர் பிரிந்தி விடும் அபாயம் ஏற்படும், அல்லது நீண்ட நெடிய படுக்கையில் சாய்த்து விடும்.
ஒரு கையை இழந்து விட்டால் அடுத்தக் கையின் உதவியுடன் சில காலங்களை நகர்த்தி விட முடியும், ஒரு காலை இழந்து விட்டால் ஒரு கம்பின் துனையுடன் மற்றொரு கால் அதை வழி நடத்திச் செல்லும். சில உறுப்புக்கள் உடம்பில் இரண்டிரண்டு இருப்பது போல் நுரையீரல இரண்டு இருப்பதில்லை ஒன்று மட்டுமே இருப்பதால் அந்த ஒன்றையும் வெகு சுலபமாக செயல் இழக்கச் செய்யும் அபார சக்தி நிக்கோட்டினில் இருப்பதாக பல ஆய்வுகள் அறிவிக்கிறது. மேல்படி சிகரெட் தயாரிக்கும் நிருவனங்களே பாக்கெட்டின் மேல் அதன் தீமைகளை எழுதி விடுகிறார்கள்.
நிக்கோட்டினால் சிலருக்கு நுரையீரல முழுமையாக செயல் இழந்து உயிர் பிரிந்து விடும். அல்லது அபாயத்தின் உச்சக் கட்டத்துக்கு இட்டுச்சென்று ஆஸ்பத்திரியில் தஞ்சம் புக வைத்து விடும்.
இது பல ஆயிரம் பல லட்சம் என செலவை இழுத்து விடும். அதில் பலர் பரம ஏழைகளாகவும் இருப்பர் அவருடைய வைத்திய செலவுக்காக அவருடைய வாரிசுகள் ஆங்காங்கே கையேந்தும் அவல நிலையையும் உண்டு பண்ணி விடுவார்கள். இந்த மாதிரி கன்றாவி காட்சிகளை பல இடங்களில் கண்டு வருகிறோம். அவர்கள் துடிப்போடு செயல் பட்டக் காலத்தில் தங்கள் வாரிசுக்காக எதையும் சேர்த்து வைத்தவர்களாகக் கூட இருந்திருக்க மாட்டார்கள்.
- நீங்கள் பொறுப்பு தாரிகள் என்பதைக் கூட பல வேளைகளில் மறந்து விடுகிறீர்கள்.
- உங்களுடைய வயதான தாய், தந்தையர் இருப்பர் ஓடியாடி உழைத்து கஸ்ட்டபபட்டுவளர்த்து ஆளாக்கி விட்டு தளர்ந்து போன நிலையில் உங்களுடைய கையை எதிர்பார்த்தவர்களாக இருப்பர்,
- உங்களுடைய மனைவி, பிள்ளைகள் உங்களை எதிர் பார்த்து இருப்பர்,
- நீங்கள் குடும்பத்தில் மூத்தவராக இருந்தால் உங்கள் தம்பி தங்கையர் உங்களை எதிர் பார்த்து இருப்பர்.
நீங்கள் பராமரிக்க வேண்டிய அந்த அப்பாவிகள் உங்களுடைய வைத்திய செலவுகளுக்காக கையேந்தி வீதி வீதியாய் திறிந்து கொண்டிருப்பார்கள். அத்துடன் அவர்களுடைய வயிற்றுக்காகவும் அவர்களுடைய பிற தேவைகளுக்காகவும் கூட தேடிக் கொள்ளும் பரிதாப நிலை காண்பவர்களுடைய கண்களை கசியச் செய்து விடும். மேலும் ஒரு வேதனையான விஷயம் என்னவென்றால் அவர்களில் ஒன்றிரண்டு வயதுக்கு வந்த பெண் பிள்ளைகள் கூட இருப்பார்கள் அவர்களால் தங்களுடைய தேவைகளுக்காக கையேந்தி வீதிக்கு வரமுடியாத நிலையில் பல வெறுக்கத்தக்க அவலங்களுக்கு ஆளாகி விடுவர்.
உங்களின் செயல் துடிப்பானக் காலங்களில் தங்களின் சிற்றின்பங்களுக்காக கூடா நட்பில் வீழ்ந்து நினைவிழந்து தன் வாரிசுகளையும் பிச்சைக் காரர்களாக்கி விடுவீர்கள்.
இது சிகரெட் எனும் தலைப்பில் எழுதப் பட்டதால் மேற் கூறப்பட்டவைகள் புகைப்பவர்களுக்கு மட்டும் என நினைத்து விடக்கூடாது. குடிப்பவர்களுக்கும் சேர்த்தே உள்ளவையாகும்.
குடியில் உள்ள அனைத்துத் தீமைகளும் புகைத்தலிலும் கண்டிப்பாக உண்டு. இரண்டிலும் ஒரே மாதிரியான தீமைகளையே காணலாம். இரண்டுக்கும் உள்ள சிறிய வித்தியாசம் யாதெனில்
- குடி அன்றுக் கொல்லும்
- புகை நின்றுக் கொல்லும்
- குடிப்பபவர்களை சமுதாயம் குடிகாரர்கள் எனக்கூறும் ( சமுதாய அவமதிப்பு )
- புகைப்பவர்களை புகைக்காரர்கள் என அழைப்பதில்லை (சமுதாய அங்கீகரிப்பு )
புகைக்கு சமுதாயத்தில் பலத்த எதிர்ப்பு இல்லதாததால் புகைப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. அதே போல் ஒவ்வொரு ( ஹார்ட் அட்டாக்) மரணங்களும் அதிகரித்துக் கொண்டு செல்கின்றன. இதில் பலருக்கு மருத்துவ சோதனையில் நிக்கோட்டின் அடைப்பேக் காரணம் எனக் கண்டறியப் பட்டுள்ளது.
பெரும்பாலான ஹார்ட் அட்டாக் மரணங்கள் மருத்துவ சோதனைக்குக் கொண்டு செல்வதில்லை ஹார்ட் அட்டாக் மரண உடல் விரைவில் கெட்டு விடும் என்பதால் தாமதிக்காமல் அடக்கம் செய்து விடுவார்கள். புகையாளர்களுடைய அனைத்து ஹார்ட் அட்டாக் மரணங்களையும் மருத்துவ சோதனைக்குட் படுத்தினால் பெரும்பாலான மரணங்களுக்கு மருத்துவ சான்றிதழ்கள் நிக்கோட்டின் அடைப்பையே உறுதிப் படுத்தும். http://amazingfamilylife.com/2011/06/29/new-fda-warnings-labels-fail-to-address-danger-of-addiction-to-nicotine-2/
இன்னுமொன்றை இங்கே குறிபிட்டாக வேண்டும் பலருக்கு கொலஸ்ட்ரால் இருக்கும் கொலஸ்ட்ரால் உள்ளவர்களுக்கு சிறிய அளவிலான நிக்கோட்டின் இருந்தாலேப் போதும் தாமதமின்றி அடைப்பு ஏற்பட்டு விடும்
கொலஸ்ட்ராலை சில உடற் பயிற்சிகள் மூலம் கன்டரோலுக்குக் கொண்டு வந்து விட முடியும். நிக்கோட்டினை எந்த உடற் பயிற்சியின் மூலமும் புகைத்தலை அடியோடு நிருத்தாத வரை கன்டரோலுக்கு கொண்டு வர முடியாது.
அல்லாஹ்வின் பாசமிகு நல்லடியார்களே !
நாம் ஒரே நேரத்தில் நமது உயிரை மாய்த்துக் கொள்வது எப்படி தற்கொலையில் சேருமோ - அது போலவே நமது உடலை சிறப்பாக இயக்கும் சில உறுப்புக்களை நாமே அறிந்து கொண்டே சிற்றின்பத்திற்காக கொஞ்சம் கொஞ்சமாக அழியக் காரணமாகி விடுவதும் அவை மரணத்தை நோக்கிச் செல்வதும் தற்கொலைக்கு சமமானதாகும்.
- ஆகவே உங்களை மேல்படி பழக்கங்களுக்கு அடிமையாக்கி விடாமல் தடுத்துக் கொள்ளுங்கள் . இதன் மூலம் அல்லாஹ்வின் கட்டளையை ஏற்றுக் கொண்ட சிறந்த அடியானாக ஆகி விடுவீர்.
- தன் கையால் தானே அழிவைத்தேடிக்கொண்ட இழி நிலைக்காளாகமல் இருப்பீர்
- நீங்கள் ஏழ்மையானவராக இருந்தால் உங்கள் வாரிசு தாரருக்கு சிரமம் கொடுக்காதவராய் இருப்பீர்.
- சியோனிஷ - பாஷிசக் கம்பெனிக் காரர்களுக்கு உதவமாலிருப்பீர் உங்களுடைய ஒவ்வொரு ரியாலும் (பைசாவும்) சியோனிஷ-பாஷிச அபைபுகளுக்கு செல்லாதிருக்கும் .
- நீங்கள் கஸ்டப் பட்டு சேர்த்தப் பொருளாதாரம் வீன் விரயம் ஆகாமல் உங்கள் பராமரிப்பின் கீழ் உள்ளவர்களை சரியாகச் சென்றடையும். ஆதன் மூலம் உங்களை எதிர்பார்த்து காத்திருக்கும் உங்கள் மனைவி, பிள்ளைகளை - வயதான தாய் , தந்தையரை - தம்பி , தங்கையரை பராமரித்தவராவீர். (இறைவனின் உத்தரவு வரும் வரை) உங்களுடைய உயிர் விலை மதிப்பற்றதாய் இருக்கும்.
அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள். ஒருவன் தனது பொறுப்பிலுல்லவர்களை பராமரிக்காமல் விட்டு விடுவதே அவன் பாவி என்பதற்கு போதுமான சான்றாகும். நூல்:அஹமத், ஹாகிம்
தொடக்கத்தில் கானும் குர்ஆன் வசனம் தற்கொலையை தடுக்கிறது இறுதியில் கானும் நபிமொழி தனது பராமரிப்பில் உள்ளவர்களை கவனிக்கச் சொல்லி வலியுருத்துகிறது.
புகைத்து நோயாளியாக மருத்துவமனையில் படுத்துக் கொண்டால் பொறுப்பில் உள்ளவர்களை எப்படிக் கவனிக்க முடியும்.
இதற்கு மேலும் ஒருவர் புகையை தடை செய்வதான நேரடி அறிவிப்புகள் இல்லை என வாதிட்டு தன்னை அழித்துக் கொள்வார்களேயானால் அவர்கள் தங்கள் மறுமை வாழ்வை சிந்தித்துக் கொள்ளட்டும்
குறிப்பு: இந்நிலை ஏழை நாடுகளில் மட்டும் தான் என நினைத்து விட வேண்டாம் வளைகுடா நாடுகளில் அதிகமாகவே காணப்பட்டுக் கொண்டிருக்கின்றது. ஏழை அரபுக்கள் மருத்துவ நோய்ச் சான்றிதழை கையில் ஏந்தி கம்பெனி கம்பெனியாக வசூல் பண்ணும் அவல நிலையை கண்டு வருகிறோம்.)
وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்


